Friday, April 26, 2024

“என்லட்” சட்டக்கல்வி நுழைவுத் தேர்வு ரத்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

Must Read

கடந்த 12 ஆம் தேதி பெங்களூரு தேசிய சட்ட பல்கலைக்கழகம் நடத்திய “என்லட்” சட்ட கல்வி நுழைவு தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்த தேர்வினை எழுதிய மாணவர்கள் மீண்டும் “கிளாட்” தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டகல்வி நுழைவு தேர்வு:

இந்தியாவில் மொத்தமாக 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான “கிளாட்” எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு ஒன்றினை நடத்தும். இந்த தேர்வு பி.எல்., எம்.எல்., மற்றும் ஹானர்ஸ் படிப்பிற்காக நடத்தப்படும். இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 2020 – 2021 கல்வியாண்டிற்கான தேர்வுகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாணவர்களும் தயாராகி வந்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு சட்ட பல்கலைக்கழகம் “என்லட்” என்ற தேசிய தேர்வு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைத்தனர். கூடுதலாக இந்த தேர்வு அடிப்படையில் மாணவர்களுக்கு சேர்க்கை இருக்காது என்றும் பல்கலைக்கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்:

இந்த தன்னிச்சையான முடிவினை எதிர்த்து பெங்களூரு தேசிய சட்ட பல்கலை முன்னாள் துணை வேந்தர், வெங்கட ராவ் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இது ஒரு பக்கம் இருக்க தேர்வுகள் அறிவித்த தேதியில் நடந்தன. மனுவினை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கூறி இருந்தது. தற்போது, இந்த விவகாரத்திற்கான தீர்ப்பு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

பிக்பாஸில் இந்த 2 கவர்ச்சி புயல்களும் கலந்து கொள்வது உறுதி – ரசிகர்கள் உற்சாகம்!!

தீர்ப்பில் கூறப்பட்டதாவது “பெங்களூரு பல்கலைக்கழகம் தன்னிச்சையாக நுழைவுத் தேர்வு அறிவித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சட்டம் படிக்க வேண்டும் என்ற மாணவர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது, கூடுதலாக அவர்களை அச்சம் அடையவும் வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், இந்த தேர்வுகள் செல்லாது.” என்று அறிவித்துள்ளது. இதனால் பெங்களூரு பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மீண்டும் “கிளாட்” தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -