தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக சம்மன்!!

0

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 19ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ரஜினிகாந்த் ஆஜராவாரா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

துப்பாக்கிச்சூடு சம்பவம்:

கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2020 பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். விசாரணையில் நீதிமன்றம் கேட்கக்கூடிய கேள்விகள் அடங்கிய அரசு சீல் வைக்கப்பட்ட கவரை ரஜினிகாந்திடம் கொடுத்துள்ளதாக தகவல் அளித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 24வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இந்த விசாரணைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை வகித்தார். இந்த விசாரணையின் போது 11 பேருக்கு நேரில் வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஜனவரி 22ம் தேதி வரை நடக்கவுள்ள விசாரணைக்கு 56 பேருக்கு சம்மன் அனுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் வருகை கட்டாயமில்லை – கண்காணிப்பு குழு தலைவர் அறிவிப்பு!!

மேலும் இந்த விசாரணைக்கு ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் சார்பாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. மேலும் அவர் நேரில் வந்து ஆஜராவாரா? இல்லையா? அல்லது அவரது வழக்கறிஞர் ஆஜராவாரா என்று இன்னும் உறுதியாகவில்லை என தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here