தெலுங்கு ரேஞ்சுக்கு இறங்கி கலக்கும் ராஜா ராணி அர்ச்சனா – என்னமா பின்றாங்க பாருங்களே!!

0
archana
அட இதுதான் விஷயமா..ராஜா ராணி-யில் இருந்து விலகிய உடன் திருமண கோலத்தில் அதிர வைத்த அர்ச்சனா!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி 2 அர்ச்சனா

ராஜா ராணி 2 சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. சரவணனும் சந்தியாவும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர்.

archana
archana

ஆனால் இவர்களை பிரிப்பது எப்படி என்று யோசிப்பவர் தான் அர்ச்சனா. இதனால் தான் இந்த சீரியல் சுவாரசியமாக நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது இதே வெற்றியுடனேயே 200 எபிசோடுகளை கடந்து சாதனை புரிந்துள்ளனர்.

என்ன தான் இந்த சீரியல் ஹிந்தி ரீமேக்காக இருந்தாலும் மக்களின் ஆர்வம் குறையாமல் பார்த்து வருகின்றனர். நாயகியாக நடிக்கும் ஆலியா மனசாவை விட அர்ச்சனாவிற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தான் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஷார்ட் பிலிம் மூலம் விஜய் டிவி வாய்ப்பு கிடைக்க தற்போது இந்த சீரியலில் கலக்கி வருகிறார்.

மேலும் இன்ஸ்டாவிலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்தே வருகின்றனர். ஏனெனில் இவர் போடும் போட்டோஷூட், ரீல்ஸ்கள் அந்த அளவிற்கு பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ராஜா ராணி அர்ச்சனா தெலுங்கு பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here