ஷிவானியின் சாதனையை முறியடித்த அஞ்சலி… இதுலயுமா போட்டி போடுவீங்க!!!

0

சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தொட்டிலில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி பல யோகாசனங்களை செய்து உள்ளார். அந்த யோகாசன புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.

தெலுங்கு திரைத்துறை மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் ஜீவாவின் கற்றது தமிழ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் மக்களுக்கு தன் முகத்தை காட்டினார். இருப்பினும் அவர் அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சியமானார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

மேலும்  தற்போது இவர் கைவசம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரு சில படங்களை வைத்து உள்ளார். தற்போது அவர் சிறு குழந்தைகளை தூங்க வைக்க கட்டப்படும் தொட்டிலில் உடலை ரப்பராக வளைத்து நெளித்து பல யோகாசனங்களை செய்து உள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த யோகாசன போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here