வெளிவந்த ஆதியின் உண்மை முகம்.., ஜெஸ்ஸி எடுக்க போகும் அதிரடி முடிவு.., ராஜா ராணி 2 அடுத்த கதைக்களம் இதுதான்!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது ஆதியின் முகம் வெட்டவெளிச்சமாகும் நிலையில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். அதுவும் ஆதிக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் தானாக வந்து வலையில் சிக்கி கொண்டார் ஆதி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கருவை கலைச்சுட்டு வேற வேலை இருந்தா பாரு என்று சொல்லி விட்டு ஆதி வெளியே வர பெரிய ஷாக் அவருக்கு, ஏனெனில் மொத்த குடும்பமும் வெளியே நின்று கொண்டிருந்தது. அபொழுதாவது உண்மையை ஒத்து கொண்டிருக்கலாம். ஆனால் அதுவும் இல்லாமல் ஏதேதோ சொல்லி மழுப்ப இதனால் கோவமடையும் சிவகாமி, சரவணன் அவரை போட்டு அடிக்கின்றனர்.

சிவகாமி இனிமேல் நீ வீட்டுக்கே வராத என்று சொல்ல சரவணன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். அந்த பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட கை காலில் விழுந்தாச்சும் ஆதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அது தான் நம்ம செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் என்று சொல்கிறார். ஆனால் ஜெஸ்ஸி இதற்கு ஒத்து கொள்வாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் சீரியலை நகர்த்துவதற்கு அவர் வீம்பு பிடிப்பது போல கூட காட்ட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here