திடீர் லக்கில் லாட்டரி அடித்த..,குக்கு வித் கோமாளி பிரபலம் – எல்லாம் உங்க ஆசி தான்!

0

குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் சீசன் 3ல் போட்டியாளராக களமிறங்கி மக்கள் மனதில் ஆழமான இடத்தை பெற்றவர் நடிகை அம்மு அபிராமி. இவர் ‘கத்தரி பூவழகி’ ட்ரெண்டிங் பாடல் இடம்பெற்ற அசுரன் படத்தில் நடித்து நல்ல ரீச்சை பெற்றார். அதன் பிறகு என்ட்ரி கொடுத்தது தான் இந்த விஜய் டிவி குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ.

இதன் ஷோவை பார்த்த ரசிகர்களுக்கு அம்மு அபிராமி, நடிப்பு மட்டுமல்லாது சமையலிலும் குயின் தான் என்பதையும் தெரிந்து கொண்டனர் . தற்போது அம்மு அபிராமி சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் சதீஸ் குமரன் இயக்கத்திலும், திரவியம் பாலா தயாரிப்பிலும் தயாராகவிருக்கும் “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு பூஜை இனிதே நடந்து முடிந்துள்ளது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான கதையை கொண்டு இந்த திரைப்படம் உருவாகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும், சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ராம் சதீஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வந்த சதீஸ் குமார் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here