விக்ரமோட உழைப்பு இப்படி வீணா போச்சே? கோப்ரா படத்தை துரத்தி அடிக்கும் உச்ச கட்ட பிரச்சனைகள்!!

0
இதெல்லாம் நமக்கு செட் ஆகாது - திடீரென முடிவை மாற்றிய விக்ரம் படக்குழு!!
விக்ரமோட உழைப்பு இப்படி வீணா போச்சே? கோப்ரா படத்தை துரத்தி அடிக்கும் உச்ச கட்ட பிரச்சனைகள்!!

நடிகர் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் வெளியானதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

தொடரும் சோதனைகள்:

நடிகர் விக்ரம் தனது மகான் திரைப்படத்தை அடுத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் நடித்துள்ள விக்ரமின் நடிப்பு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் இசையும் படத்திற்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. இந்த நிலையில் படத்தின், பார்வை 3 மணி நேரத்தை தாண்டுவதால், 20 நிமிட காட்சிகளை கட் செய்வதாக படக்குழு அண்மையில் அறிவித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து நேற்று, வெளியான முதல் நாளில் 11 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம், 2வது நாளில் அப்படியே வசூலில் பாதியாக குறைந்து விட்டது. படத்திற்கு, இப்படி சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டிருக்கும் நிலையில் முக்கிய இணையதளங்களில் படத்தின் முழு காட்சியும் கசிந்துள்ளது. Tamilrockers, Telegram, Filmyzilla உள்ளிட்ட புகழ்பெற்ற பிளாட்பார்ம்களில் கோப்ரா படம்  சட்டத்திற்கு புறம்பாக வெளியாகி இருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here