யார் சொன்னது.,ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கட்டாயம் உண்டு – பிரபல தனியார் நிறுவனம் அதிரடி!!

0
யார் சொன்னது.,ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கட்டாயம் உண்டு - பிரபல தனியார் நிறுவனம் அதிரடி!!

TCS என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு சம்பள உயர்வு கொள்கையில் எவ்வித மாற்றமின்றி அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனம் அறிவிப்பு:

இந்தியா முழுவதும் இயங்கி வரும் முக்கியமான ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பணியில் சேர்ந்து ஓராண்டு மட்டுமே நிறைவு பெற்ற ஊழியர்களுக்கும், ஏப்ரல் 1ம் தேதியுடன் ஓராண்டு பணியை நிறைவு செய்தவர்களுக்கும் ஊதிய உயர்வு கிடைக்காது என தகவல் வெளியாகியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிறுவனம், எந்த பாரபட்சமும் இன்றி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு கொள்கை அப்படியே பின்பற்றப்படும் என்றும், அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு என தெளிவு படுத்தி உள்ளது. தொழிற்துறை நிலைக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here