‘இன்னைக்கு ஒரு புடி’ – வில்லேஜ் குக்கிங் யூடியூப் கிராமத்து சமையலர்களுடன் ராகுல் காந்தி!!

0

சமிபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கிராமத்தினருடன் சேர்ந்து சமையல் செய்து அசத்தியுள்ளார். மேலும் அவர்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவும் உண்டுள்ளார். இதனால் கிராமத்து சமையல் கலைஞர்கள் குஷி அடைந்துள்ளனர்.

ராகுல் காந்தி:

தற்போது தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் வந்தார். அவர் தேர்தல் குறித்தும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இங்கு வந்த அவர் ஜல்லிக்கட்டு விழாவிலும் கலந்துகொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீபத்தில் ராகுலுக்கு கரூர் மாவட்டம் அருகே உள்ள அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தோட்டத்தில் சமையல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சமையலை யூடியூப் புகழ், வில்லேஜ் குக்கிங் சேனல் கலைஞர்கள் மேற்கொண்டனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக சமையல் செய்து அதனை அருகே உள்ள முதியோர் ஆசிரமத்திற்கு வழங்கி வருகின்றனர். மேலும் இவர்கள் சமையல் செய்யும் வீடியோ யூடியூபில் வைரலாகி வரும். தற்போது இவர்கள் தான் ராகுலுக்கு சமையல் சமைத்துள்ளனர்.

பிரியாணி சமைத்த ராகுல்:

இவர்கள் தற்போது ராகுலுக்கு காளான் பிரியாணியை செய்தனர். இவர்கள் சமையல் செய்யும் பொழுது ராகுலும் சமையலில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் அவர்களுடன் சில நிமிடம் தமிழில் உரையாடியுள்ளார். அதன் பின்பு ராகுலும் சமைக்க துவங்கியுள்ளார். ரைத்தாவை ருசி பார்த்த ராகுல், நானும் சமைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பிரியாணி நன்கு மணமாக உள்ளது என்றும் பார்ப்பதற்கும் நன்றாக உள்ளதும் என்றும் சமையல் கலைஞர்களை பாராட்டியுள்ளார்.

வித்தியாசமான கான்செப்ட்டில் கலக்கும் குக் வித் கோமாளி – வெளியான ப்ரோமோ!!

நல்ல மணம் வந்த காளான் பிரியாணியை சாப்பிட்ட ராகுல் காந்தி மிக அருமையாக உள்ளது என்று பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் அடுத்த முறை வரும் பொழுது தனக்கு ஈசல் சமைத்து தரவேண்டும் என்றும் கூறியுள்ளாராம். மேலும் காளான் பிரியாணியை ஓலைப்பாயில் சமையல் கலைஞர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளாராம். இதனை குறித்து பேசிய இளம் சமையல் கலைஞர்கள் கூறியதாவது, அண்ணனுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here