ராகு, கேது தோஷம் வராம இருக்கணுமா?? இந்த பரிகாரத்தை பண்ணுங்க!!

0
rahu kethu dhosam
rahu kethu dhosam

ஒருவரது ஜாதகத்தில் ராகு , கேது தோஷம் என்பது முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று. ராகு, கேது தோஷம் இருக்கும் பட்சத்தில் சில பரிகாரங்கள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்யலாம்.

ராகு, கேது

ராகு, கேதுவிற்கு தனிப்பட்ட ராசிகள் எதுவும் கிடையாது. அவர்கள் எந்த இடத்தில அமர்கின்றார்களோ அந்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவர். ராகு எந்த வீட்டில்(ராசியில்) அமர்கின்றாரோ அதற்கு 7 ஆம் இடத்தில தான் கேது அமர்வார். அதனால் தான் ராகு உச்சமடைந்தால் கேது நீசமடைவார். கேது உச்சமடைந்தால் ராகு நீசமடைவார்.

rahu kethu dhosam
rahu kethu dhosam

கேது உச்சமடைந்தால் ஆசைகளை தூண்டிவிட்டு ஏமாற்றி விடுவார். எனவே தான் கேது போல் கெடுப்பாரும் இல்லை, ராகு போல் கொடுப்பாரும் இல்லை என்று கூறுவர். ஜாதகத்தில் ஒருவருக்கு 8 ஆம் இடத்தில் ராகு இருந்தால் அவருக்கு களத்திர தோஷம் ஏற்படுகிறது. ராகு, கேது தோஷம் ஏற்படாமல் இருக்க சில பரிகாரங்கள் உள்ளன.

பரிகாரம்

பாம்பு புற்றுகளை தேவையில்லாத காரியங்களுக்கு இடிக்க கூடாது. அடர்ந்த வனங்கள் மற்றும் காடுகளை அளிக்க கூடாது. அரசு சொத்துக்களை வளைத்துப்போட கூடாது. ஏழை எளியவர்களிடம் இருந்து ஏமாற்றி பணம் பறிக்க கூடாது. முன்னோர் சொத்துக்களை நியாயமான காரணங்களை தவிர வேற எதற்கும் விற்க கூடாது. மேலும் நமக்கு கற்று கொடுத்த குருவை அவமதித்தல் கூடவே கூடாது.

rahu kethu dhosam
rahu kethu dhosam

பெண்கள் விருப்பம் இல்லாமல் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தல் கூடவே கூடாது. இதனால் கடுமையான களத்திர தோஷம் உண்டாகும். அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படுதல், பொறாமை கொள்வது, களவாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேவிப்பட்டினத்தில் உள்ள நவகிரகங்களை வழிபட்டு வந்தால் நன்மை கிட்டும் இதனால் ராகு கேது தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here