வெளிநாட்டு உதவியால் இந்தியாவிற்கு என்ன பயன்?? மத்திய அரசை கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி!!

0

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவிவருகின்றது. இடையடுத்து வெளிகாட்டிலிருந்து இந்தியாவிற்கு உதவிகள் வந்துசேர்கின்றன. இதில் ஏன் வெளிப்படை தன்மை இல்லை? இந்த தடுப்பு பொருட்கள் எங்கே? இதில் பயனடைபவர்கள் யார் என்று ராகுல் காந்தி மத்திய அமைச்சருக்கு கேள்வி எழுப்பிவுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி மத்திய அமைச்சருக்கி கேள்வி

கொரோனாவின் இரண்டாவது அலையில் தாக்கம் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலி எணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கின்றது. இதனால் வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பு உதவிகள் இந்தியாவிற்கு தினமும் வந்து சேர்கின்றன. இந்த தடுப்பு பொருட்கள் எங்கே? இதையெல்லாம் யார் அனுபவிகின்றன என ட்விட்டரில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பிவுள்ளார்.

மே 5-ஆம் தேதி ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் “எந்த எந்த பொருட்கள் வெளிநாட்டின் உதவியாக இந்தியாவிற்கு வந்து சேர்த்துள்ளன? அவையெல்லாம் தற்போது எங்கு உள்ளது? இந்த உதவி பொருட்களினால் யாரெல்லாம் பயனடைகிறார்கள்? அவை எவ்வாறு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகின்றன? ஏன் இதில் வெளிப்படை தன்மை இல்லை? இதற்கெல்லாம் பதில்கள் உள்ளனவா?” என்று இந்தியா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

கிட்டத்தட்ட 40 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொரோனா தொற்றிற்கு உதவியாக வந்து சேர்த்துள்ளன. இதில் வெளிப்படை தன்மை வேண்டும். இதை இந்தியா அரசாங்கம் மாநிலங்களுக்கு எவ்வாறு பிரித்து கொள்கின்றன, இதனால் யாரெல்லாம் பயனடைக்கின்றன என்று ராகுல் காந்தி மத்திய அரசாங்கத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பிவுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here