Friday, April 26, 2024

“நாட்டின் அமைதியை குலைப்பவர்கள் தான் ரஃபேல் பற்றி குற்றம் சாட்டுபவர்கள்” – ராஜ்நாத் காட்டம்!!

Must Read

இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் இல் இருந்து சீன எல்லையில் நிறுத்தி வைக்க ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டு இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அனைவர்க்கும் பதிலடி கொடுத்து உள்ளார், ராஜ்நாத் சிங்.

ரஃபேல் விமானங்கள்:

நம் நாட்டின் விமான படைபலத்தை உலகிற்கு உணர்த்த இந்திய அரசால் ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்த வாங்கப்பட்டது. 36 ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா அரசு பிரான்ஸ் அரசுடன் ஒப்புதல் அளித்து இருந்தது. அந்த 36 ரஃபேல் விமானங்களில் 5 ரஃபேல் விமானங்கள் இன்று வந்தடைந்தது. இதனை இயக்க சிறப்பாக விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, அவர்கள் தான் இதனை இன்று இந்தியாவில் தரையிறக்கினர்.

மீதம் உள்ள ரஃபேல் விமானங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்க பிரான்ஸ் ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த புதிய ரஃபேல் விமானங்களை சீன எல்லையான லடாக்கில் நிறுத்த அரசால் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

rafel aircraft pilots
rafel aircraft pilots

இந்த விமானங்கள் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் இது தேவையான ஒன்றா என்றும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

ராஜ்நாத் பதிலடி:

rajnath singh
rajnath singh

இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் தனது ட்விட்டர் பக்கத்தில் ” நான் அனைவர்க்கும் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான் விமானத்துறைக்கு வந்து இருக்கும் புதிய சக்தியை குறித்து யாராவது கவலை கொண்டாலோ அல்லது விமர்சித்தாலோ அவர்கள் அமைதியை குலைக்க வழிவகை செய்பவர்கள். இந்த விவாகரத்திற்கு அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -