சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைச்சரவை – 5 தமிழர்கள் பதவியேற்பு..!

0

பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் பதவியேற்பு..!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இத்தேர்தல் மூலம் 93 எம்பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். இந்த ஆண்டு முதன்முறையாக இஸ்தானா, நாடாளுமன்றம் என 2 இடங்களில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

அதிபர் ஹலிமா உரை நிகழ்த்தி பதவியேற்புச் சடங்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் லூங் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். லீ சியென் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உள்பட 37 பேர் பதவியேற்றுள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பதவியேற்ற தமிழர்கள்..!

தாமதமாகும் 3 வது விமானம் தாங்கி கப்பல் இயக்கம்!! இந்திய கடற்படை அதிருப்தி!!

தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். கா.சண்முகம், எஸ்.ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர். இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகத் தொடர்வதுடன் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராக பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here