தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ரபாடா புதிய சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

0

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்துவீச்சாளர் ரபாடா ஓர் சாதனையை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா:

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்ற தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. சுமார் 14 ஆண்டுகள் கழித்து தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானிற்கு டெஸ்ட் போட்டியை விளையாட சென்றுள்ளது. தற்போது இரு அணிகளும் தங்களது முதலவாது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் முதலாவதாக தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. தனது முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 220 ரன்களுக்கு சுருண்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. அதன்பிறகு பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்கியது. பௌலிங்கை போல் பேட்டிங்கிலும் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்துவீச்சாளர் ரபாடா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

புதிய சாதனை

மேலும் இந்த போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ரபாடா ஓர் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த 3 விக்கெட் மூலம் டெஸ்ட் தொடரில் இவர் 200 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் குறைந்த வயதில் 200 விக்கெட்களை கைப்பற்றியுள்ள வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரபாடா.

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

He is already regarded as a great of the game': Kagiso Rabada picks the best batsman of the world

மேலும் 200 டெஸ்ட் விக்கெட்களை எடுத்துள்ள வீரர்களின் பட்டியலில் தற்போது ரபாடாவும் இணைந்துள்ளார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here