சொந்தமா எதுவுமே யோசிக்க மாட்டிங்களா?? ஜீ தமிழை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது தேவயானி நடிக்க இருக்கும் புது புது அர்த்தங்கள் சீரியலை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சொந்தமாவே எதுவுமே யோசிக்க மாட்டிங்களா என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜீ தமிழ்

விஜய் டிவியில் எப்பொழுதுமே புது விதமான கான்செப்டில் ப்ரோக்ராமை வெளியிடுவது வழக்கம். தற்போது அதெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் எகிறிக்கொண்டு தான் உள்ளது. சீரியலில் இருந்து டிவி நிகழ்ச்சி வரை மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து தான் வருகிறது. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சீரியல்கள் வெற்றி நடை போட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ஜீ தமிழுக்கும் விஜய் டிவிக்கும் போட்டிகள் நடந்து கொண்டு தான் உள்ளது.

தேசிய விருது பெற்ற பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்து – வைரலாகும் ட்வீட்ஸ்!!

தற்போது ஜீ தமிழ் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைந்துகொண்டே செல்கிறது. அனைத்து சீரியல்களை முடிவுறும் தருவாயில் உள்ளது. எல்லா டிவி ஷோவும் விஜய் டீவியை பார்த்து தான் காப்பி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவி வருகிறது. தற்போது புது புது அர்த்தங்கள் என்ற சீரியல் ப்ரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. இதில் தேவையானி நடிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு அம்மாவிற்கு வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் தான் கதைக்களம். இதனை விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் காப்பி தான் என்றும் கூறி வருகின்றனர். ப்ரோமோ முதற்கொண்டு மாறாமல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here