
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் 46 வது பிறந்த நாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார்
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் புனித் ராஜ்குமார். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் இருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சினிமாவில் நல்ல நிலைமைக்கு வந்த புனித் ராஜ்குமார் சத்தமில்லாமல் செய்த உதவி அவரின் மறைவுக்குப் பின்பு தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. அவர் செய்ததாவது, கிட்டத்தட்ட 1800 மாணவ மாணவிகளை படிக்க வைத்தது மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்கள் என்று பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது ரசிகர்களின் குடும்பத்திற்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.
மேலும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்குப் பின் அவரது இரு கண்களும் தானம் செய்யப்பட்டது. அப்பேற்பட்ட புனித் ராஜ்குமாரின் 46வது பிறந்த நாள் இன்று. புனித் ராஜ்குமார் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும், மக்கள் நெஞ்சில் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக ரசிகர்கள் அனைவரும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும் ட்வீட்டர் மூலம் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.