இந்தியாவின் புஜாராவை வீழ்த்தி நம்பர் 1. ஆன ஆஸ்திரேலிய வீரர்…, ஒரே பவுலரிடம் அடிக்கடி சிக்கிய பேட்ஸ்மேன்!!

0
இந்தியாவின் புஜாராவை வீழ்த்தி நம்பர் 1. ஆன ஆஸ்திரேலிய வீரர்..., ஒரே பவுலரிடம் அடிக்கடி சிக்கிய பேட்ஸ்மேன்!!
இந்தியாவின் புஜாராவை வீழ்த்தி நம்பர் 1. ஆன ஆஸ்திரேலிய வீரர்..., ஒரே பவுலரிடம் அடிக்கடி சிக்கிய பேட்ஸ்மேன்!!

பார்டர் கவாஸ்கர் டிராபியின் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் புஜாராவை வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

நாதன் லியோன்:

இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி 109 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 88 ரன்கள் மட்டுமே எடுத்து 197 ரன்களுக்குள் சுருண்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து தங்களது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் முடிவிலேயே ஆல் அவுட்டாக 75 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில், இந்திய அணியின் புஜாரா மட்டும் நிதானமாக விளையாடி 59 ரன்கள் குவித்திருந்தார். இவர், அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எண்ணுகையில், ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் பந்தியில், ஸ்டீவ் ஸ்மித்தின் அற்புதமான கேட்ச்சில் தனது விக்கெட்டை புஜாரா இழந்தார்.

சென்னைக்கு வந்திறங்கிய தோனி….,ஆரம்பமாகும் CSK யல்லோ ஃபீவர்…,

இதில், ஸ்டீவ் ஸ்மித்தின் கேட்ச் தற்போது பெரும் பேசு பொருளாக இருந்தாலும், நாதன் லியோன் விக்கெட்டுகளின் வேட்டை சாதனையாக மாறியுள்ளது. அதாவது, இந்த போட்டியில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஒரு வீரரை அதிக முறை விழ்த்திய பவுலர் என்ற பெருமையை நாதன் லியோன் பெற்றுள்ளார். இதுவரை நாதன் லியோன் புஜாராவை 13 முறை வீழ்த்தி உள்ளார். இதற்கு முன், இங்கிலாந்தின் ஆண்டர்சன் புஜாராவை 13 முறையும், இங்கிலாந்தின் டெரெக் அண்டர்வுட், கவாஸ்கரை 12 முறையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here