சென்னைக்கு வந்திறங்கிய தோனி….,ஆரம்பமாகும் CSK யல்லோ ஃபீவர்…,

0
சென்னைக்கு வந்திறங்கிய தோனி....,ஆரம்பமாகும் CSK யல்லோ ஃபீவர்...,
சென்னைக்கு வந்திறங்கிய தோனி....,ஆரம்பமாகும் CSK யல்லோ ஃபீவர்...,

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

தோனி வருகை

இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து IPL 2023 போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான பயிற்சிகளை துவங்குவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று தமிழகத்திற்கு வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, CSK அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். அந்த வகையில், சென்னை வந்திறங்கிய தோனிக்கு விமான நிலையத்தில் வைத்து பலத்த வரவேற்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா வினுஷாவின் சொந்த அம்மாவா இவங்க? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தனது சொந்த இடமான சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்களை விளையாட இருக்கிறது. அதற்காக, IPL 2023 போட்டிகளுக்கான பயிற்சிகளை CSK அணி விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here