1 முதல் 9ம் வகுப்பு ஆல் பாஸ், 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து – துணைநிலை ஆளுநர் அதிரடி!!

0

புதுவையில் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ரத்து எனவும் 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்றும் புதுவை ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தாக்கத்திற்கு பின்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1 மணி வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. நாளடைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சில நாட்களாக கொரோனா பரவல் சற்று வேகம் எடுக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக புதுவையில் தற்போது 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று அதிரடியாக ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் கூறியிருந்ததாவது, புதுவை யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ். மேலும் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதல் படி தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெறுவார்கள்.மேலும் மகே மற்றும் யாணம் பிராந்தியங்களை சேர்ந்த 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் முறையே கேரளா மற்றும் ஆந்திர வாரியங்கள் வழிகாட்டுதல்படி தேர்ச்சி பெறுவார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதுமட்டுமல்லாமல் இனி பள்ளிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே நடைபெறும். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மார்ச் 31 வரை மட்டுமே பள்ளிகள் நடைபெறும் என்றும் அதற்கு மேல் கோடை விடுமுறை துவங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். அந்தந்த வாரியங்கள் தேர்வு அட்டவணை படி 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவலினால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here