#INDvsENG டி 20 தொடர் – உத்தேச அணி பட்டியல் வெளியீடு!!

0

இன்று மாலை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தங்களது டி 20 தொடரை துவக்க உள்ளனர். தற்போது இதில் பங்குபெறும் வீரர்களின் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினருக்கு இடையே டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் தற்போது டி 20 தொடர் துவங்க உள்ளது. இந்த தொடர் இன்று மாலை 7 மணிக்கு அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இந்த தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#ENGvsIND டி20 தொடரில் ரோஹித் சர்மா & கேஎல் ராகுல் ஓப்பனிங் – விராட் கோஹ்லி பேட்டி!!

அதேபோல் டெஸ்ட் தொடரை போல் இந்த தொடரையும் வெல்லும் நோக்கில் இந்திய அணி உள்ளது. இரு அணிகளும் தக்க பலம் வாய்ந்ததால் இந்த போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 போட்டிகளை கொண்ட டி 20 தொடரில் அனைத்து போட்டிகளும் அஹமதாபாத் மைதானத்தில் தான் நடக்கும். தற்போது இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளிலும் எந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா உத்தேச அணி விவரம்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி(C), கே.எல்.ராகுல், ரிஷாப் பாண்ட், ஹர்டிக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், சஹால்.

இங்கிலாந்து உத்தேச அணி விவரம்:

பட்லர், ஜேசன் ராய், டேவிட் மலாண், பாரிஸ்டோ, ஸ்டோக்ஸ், இயான் மோர்கன்(C), சாம் கரண், டாம் கரண், ஜார்டன், ஆர்ச்சர், ரஷீத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here