பேருந்து, ரயில் சேவைகளுக்கு அனுமதி – 4 மாநில மக்கள் உள்நுழைய தடை விதித்த கர்நாடக முதல்வர்..!

0
Yediyurappa
Yediyurappa

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்க முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா ஊரடங்கு:

நாடு முழுவதும் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் பொதுப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் பல்வேறு புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். அதன்படி,

  • கர்நாடக மாநிலத்திற்குள் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் அனைத்து விதமான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் திரையரங்குகள் மற்றும் மால்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
  • தமிழகம், கேரளா, குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
  • மாநிலத்திற்குள் நுழைய அனுமதிச் சீட்டு இருந்தாலும் மே 31 வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்கள் இரண்டு நபர்களுக்கு மேல் ஏற்றிச்செல்ல அனுமதியில்லை.
  • கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் மட்டும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here