1,100 ஊழியர்கள் பணிநீக்கம் – ஸ்விகி (SWIGGY) நிறுவனம் முடிவு..!

0

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி தனது 1,100 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்து உள்ளது. இதனால் அதன் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ஸ்விகி நிறுவனம்:

இந்தியாவில் 50 நாட்களைத் தாண்டியுள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்துறையில் அடிமட்டத்திற்கு சென்று விட்டன. பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருந்தாலும் தொழில் துறைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதேபோல் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

ஸ்விகி நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்படும் எனவும், பணியாற்றிய வருடங்களின் அடிப்படையில் ஒரு வருடத்திற்க்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here