விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு பென்ஸ் கார் பரிசு – அசரவைத்த தயாரிப்பாளர்!!

0

நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்துள்ள உப்பெனா திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் புச்சிபாபு சனாவுக்கு ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இயக்குனருக்கு பரிசு

இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் புது முகங்கள் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவான ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் ‘உப்பெனா’. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நேரடியாக தெலுங்கு பட உலகுக்கு அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. 22 கோடி பட்ஜெட் செலவில் உருவான இந்த திரைப்படம் தற்போது வரை 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இத்திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பினால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருந்துள்ளனர்.

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா ஓட அம்மா அப்பாவா இது?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இத்திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் தயாரிப்பு நிறுவனம், இயக்குனருக்கு ஒரு மறக்கமுடியாத பரிசை கொடுத்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா அவர்களுக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளது திரைப்படக்குழு. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here