தேர்தல் பணியை முறையாக செய்யாத அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

0

தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் தேர்தல் பணிகளை முறையாக செய்யாத அதிகாரிகளை தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மிக பாதுகாப்பாகவும் மற்றும் முறைகேடு எதுவும் நடந்து விடமலால் இருப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளை மிக சிறப்பாக கவனிப்பதற்கு சில செலவின அதிகாரிகளும் தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மிக விரைவாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அனைத்து கட்சிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவை வால்பாறை தொகுதியில் தேர்தல் பணிகளை செய்வதற்கு பொள்ளாச்சி வடக்கு வட்டார அலுவலர் வெள்ளையங்கிரி மற்றும் காவலர்கள் பிரசாத் மற்றும் குமரவேல் நியமிக்கப்பட்டனர்.

இந்திய மக்களுக்கு அடுத்த ஆப்பு – பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு!!

இந்நிலையில் இந்த மூன்று பேரையும் தற்போது தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. காரணம், தேர்தல் செலவின பார்வையாளரான ராதாகிருஷ்ணகேடியா தேர்தல் பணி குறித்த அறிக்கையை இவர்களிடம் சமர்ப்பித்துள்ளார். அறிக்கையை சமர்ப்பித்து 2 மணி நேரமாகியும் இவர்கள் அதனை சரிபார்க்கவில்லை. பணிகளில் மிக அலட்சியமாக இந்த மூவர் இருந்துள்ளனர். இதன் காரணமாக இந்த மூன்று பேர் தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here