ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா ஓட அம்மா அப்பாவா இது?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

சன் டிவியின் ரோஜா சீரியலில் நடித்து வரும் பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா நல்காரி சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை பிரியங்காவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியங்கா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ‘ரோஜா’. யாரும் இல்லாத அனாதை பெண்ணான ரோஜா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பணக்காரரான அர்ஜுன் என்பவரை திருமணம் செய்கிறார். அர்ஜுனின் குடும்பத்தாரால் வெறுக்கப்படும் ரோஜாவின் நிலை என்ன என்பது பற்றி ஒளிபரப்பாகி வருகிறது ரோஜா சீரியல்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தொடரில் அர்ஜூனாக தெலுங்கு சீரியல் நடிகர் சிப்பு சூர்யன் நடிக்க ரோஜாவாக நடிகை பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். தெலுங்கு திரைப்பட உலகை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்காரி ஒரு சீரியல் நடிகை மற்றும் தொகுப்பாளினி. இது தவிர பல தெலுங்கு திரைப்படங்களில் முக்கியமான சில ரோல்களிலும் நடித்துள்ளார் பிரியங்கா நல்காரி.

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விகடன்,குமரன் காம்போ – அப்போ ஒரே மாஸ் தான் போங்க!!

10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகை பிரியங்கா தமிழில் சித்தார்த் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவர் நடித்திருந்த ‘காஞ்சனா 3’ படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் பிரியங்கா நல்காரி.

இவ்வாறு இருந்தாலும் சன் டிவியில் பிரியங்கா நடித்து வரும் ரோஜா சீரியல் தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது. தற்போது தமிழ் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்து வரும் நடிகை பிரியங்கா நல்காரியின் குடும்பம் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது.

அந்த வகையில் பிரியங்கா நல்காரி தன் அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கையுடன் எடுத்துள்ள குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here