சிங்கிளா நான் ரொம்ப நாளா இருந்தேன்… அப்போனா இப்ப இல்லையா??? ரோஜா சீரியல் நடிகையின் ரீல்ஸால் குழம்பிய ரசிகர்கள்!!!

0

தமிழ் சீரியல் TRP ரேட்டிங்கில் டாப் இடத்தில் இருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கார் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் உலவ விட்டு உள்ளார். அந்த பாடலின் வரிகளால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ரோஜா சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிபு சூர்யன் கதையின் நாயகனாகவும், பிரியங்கா நல்கார் கதையின் நாயகியாகவும்  நடித்து வருகின்றனர். மேலும் நடிகை  வடிவுக்கரசி அன்னபூரணி பாட்டி கதாபாத்திரத்தில், நடிகர் ராஜேஷ், டைகர் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து வருகின்றனர்.

இந்த சீரியல்  காதல், சோகம், பிரிவு, தேடல் என பல உணர்வுகளை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ரோஜா சீரியல் நொடிக்கு நொடிக்கு பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரவதால் ரசிகர்கள் கூட்டம் இதற்கு அதிகம். மேலும் இது மக்களின் பேராதரவோடு 900 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகி ரோஜா என்ற பிரியங்கா நல்கார் தான் எங்கு  சென்றாலும் அங்கு ஒரு கிளிக் எடுத்து அதை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில்,’சிங்கிளா நான் ரொம்ப நாளா இருந்தேன்’ என்ற வரிகளை கொண்ட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த பாடலின் வரிகள் மூலம் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here