காரசாரமான அரைத்து ஊற்றிய மட்டன் குழம்பு – வீக் எண்டு ஸ்பெஷல்!!

0
mutton masala
mutton masala

குறிப்பிட்ட நபர்களை தவிர பெரும்பாலும் தமிழ்நாட்டில் அசைவ பிரியர்கள் தான் அதிகம். அதுவும் மட்டன் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் தற்போது அரைத்து ஊற்றிய மட்டன் குழம்பு எப்படி செய்வது என்று இன்றைய பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

மிளகு – 1/2 டீஸ்பூன்

கிராம்பு – 3

பட்டை – 1

சின்ன வெங்காயம் – 1

தயிர் – சிறிதளவு

இஞ்சிபூண்டு விழுது – சிறிதளவு

தக்காளி – 1

செய்முறை

முதலில் மட்டனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது அதில் உப்பு, மிளகாய்த்தூள், தயிர், மஞ்சள்தூள் சேர்த்து 1 மணிநேரம் வரை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

இப்பொழுது அதனை ஆறவைத்து அதனை அரைத்து கொள்ளவும். இப்பொழுது குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, இஞ்சிபூண்டு விழுது, பட்டை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் உப்பு, அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் தண்ணீர் சேர்த்து குக்கரில் விசில் போட்டு 4 விசில் வந்ததும் இறக்க வேண்டும். அதன் பின் 5 நிமிடம் கொதிக்கவிடவும். இப்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here