என்னை சாய்த்தாளே…உயிர் தேய்த்தாலே…இனி வாழ்வேனோ இனிதாக…!இளசுகளை கவி பாட வைத்த பிரியா பவானி சங்கர்!!!

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

நாளுக்கு நாள் தன் திறமையால் வளர்ந்து கொண்டு வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பச்சை நிற சுடிதாரில் கவர்ந்திழுக்கும் அழகில் உள்ளார்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது வெள்ளித்திரை தான். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது தற்போது திரையில் சாதித்து வருபவர்களில் சிலர் சின்னத்திரை சீரியல்கள் மூலம் சென்றவர்கள் தான். அந்த வகையை சேர்ந்தவர் தான் பிரியா பவானி சங்கர்.

இவர் ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின்னர் சின்னத்திரை சீரியலில் களம் இறங்கினார். அதில் நடிக்கும் போதே வெள்ளித்திரை வாய்ப்புகள்  என அடுத்தடுத்து அவருக்கு லாட்டரி அடிக்க தொடங்கியது. இந்த வாய்ப்புகள் மூலம் சினிமாவில் அவரின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது.

அதாவது தமிழில் டாப் ஹீரோக்கள் மூலம் அந்த இடத்தை பிடிக்க போராடி வரும் வளரும் ஹீரோக்கள் என அனைவருடனும்  ஜோடி போட்டு வருகிறார். மேலும் முன்னணி நடிகைகளை விட கைவசம் அதிக படங்களுடன் சினிமா திரையில் வலம் வருகிறார். அவரின் இந்த அதிவேக வளர்ச்சி வளர்ந்து வரும் நடிகைகளுக்கு வியப்பாகவும் கடுப்பாகவும் இருந்து வருகிறது.

இருப்பினும் இதை எதையும் கண்டுக்காமல் தன்னுடைய கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஹரிஷ் கல்யாண் அவர்களுடன் ஓ மனப் பெண்ணே என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.

மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற சுடிதாரில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் உள்ள ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here