லட்சுமியின் உடல்நிலை குறித்து அறிந்து பதற்றத்துடன் ஹாஸ்பிடலுக்கு  வரும் கண்ணன்…!கோவத்தில் ஜீவா மற்றும் மூர்த்தி!!!

0

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய கதையாக, அம்மாவின் நிலை குறித்து கடை பையன் மூலமாக அறிகிறார் கண்ணன். அதன் பின்னர் அம்மாவை பார்க்க பதறி போய் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் அம்மா லட்சுமி பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பதற்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் இன்று, ஜீவாவை வண்டி பிடித்து வர சொல்லி லட்சுமியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அதன் பின்னர் டாக்டரிடம் நடந்தை கூறிகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் அவரை பரிசோதித்து கொண்டிருக்க, ரூமுக்கு வெளியே அம்மாவுக்கு ஒன்றும் ஆக கூடாது என பதற்றத்துடன் உள்ளனர் மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் முல்லை. அதன் பின்னர் வெளியே வரும் டாக்டர் அவருக்கு மன அழுத்தம் மற்றும் சாப்பிடாமல் இருந்தால் தான் இப்படி ஆகியுள்ளது. வேறு ஒன்றும் இல்லை என கூறுகிறார்.

அதனால் சற்று ஆறுதல் அடைகின்றனர். அதன் பின்னர் மூர்த்தி கடையில் யாரும் இல்லை, யாராவது ஒரு ஆள் இருக்க வேண்டும் என கூறி கதிரையும், தனத்திற்கு துணையாக இருக்குமாறு முல்லையும் அனுப்பி வைக்கின்றனர்.

அதன் பின்னர் கதிரும் முல்லையும் லட்சுமி பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதன் பின்னர் கண் விழிக்கும் லட்சுமி மூர்த்தியிடம் , உங்க  நா அப்பாவை என்  கனவில்  பார்த்ததாகவும், அவரிடம் நான் எதோ சொல்ல வரும் போது அப்படியே கண் இருட்டி விட்டதாகவும் கூறுகிறார்.

மேலும் நான் உங்கள விட்டுட்டு  போயிருவேன் என்று நினைத்தாகவும் கூறுகிறார். பதறிப்போன மூர்த்தி மற்றும் ஜீவா அவரை சமாதானம் செய்கின்றனர். இதனையடுத்து கடையில் வேலை செய்யும் சரவணனை  வழியில் பார்க்கிறார் கண்ணன். அதன் பின்னர் லட்சுமியின் நிலை குறித்து கண்ணனிடம் கூறுகிறார் சரவணன்.

அதை கேட்டு பதறிப்போன கண்ணன் தன்னுடைய அம்மாவை பார்க்க கிளம்புகிறார். இந்நிலையில் லட்சுமிக்கு சாப்பாடு மற்றும் துணிகளை எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் வருகிறார்.அதன் பின்னர் மூர்த்தியை கிளம்ப சொல்கின்றனர் ஜீவா மற்றும் மீனா. இந்நிலையில் மூர்த்தி மற்றும் ஜீவா பேசிக்கொண்டே ஹாஸ்பிடலில் நடந்து வருகின்றனர். அப்பொழுது அண்ணன் என்ற அழைத்து படி  ஓடி வருகிறார் கண்ணன். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here