நீட் தேர்வில் வெற்றி பெற இதான் வழி.., அமைச்சர் உதயநிதியிடம் சூசகமாக அப்டேட் கொடுத்த பள்ளி ஆசிரியர்!!!

0

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி திருவள்ளூர் அம்மையப்பன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பிய உதயநிதியிடம் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரகசியமாக காரில் அமர்ந்தபடியே நீட் தேர்வு குறித்து பேசி உள்ளார்.

அந்த ஆசிரியர் அமைச்சரிடம் நீட், ஜே இ இ ஆகிய தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டங்களை வெகுவாக குறைத்து விட்டது. அதே போன்று நாமும் நம்முடைய பாடத்திட்டத்திலும் சில பகுதிகளை நீக்கினால் மாணவர்களின் பாடச் சுமையையும் குறைத்து, நீட், ஜே இ இ தேர்வுக்கு தயாராக உதவியாக இருக்கும் என கூறியுள்ளார். இதை கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அது குறித்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here