செய்தித்தாள், பால் விநியோகிப்பவர்களுக்கு முன்னுரிமை – தமிழக அரசு அதிரடி!!

0
The doctor is injecting male patients.In the medical's hand have syringes.

தமிழகத்தில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி:

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் பல கட்டங்களாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த சூழலில் நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மே 1ம் தேதி அன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் வேகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது இதில் யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

அதன்படி செய்தித்தாள், பால் விநியோகம் செய்பவர்கள், மருந்தக பணியாளர்கள், ஆட்டோ, டாக்சி, பேருந்து ஓட்டுனர்கள், மின் ஊழியர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், உணவு விநியோகம் செய்பவர்கள், ஊடக பணியாளர்கள், மீன் வியாபாரிகள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here