கோவிட் 19 இறப்பு விகிதத்தில் 3 வது நாடாக இந்தியா !!!

0

இந்தியாவில் கடந்த 15 நாட்களாக தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 4000 ஆயிரத்தை தாண்டி வருகிறது. தற்போது அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை கடந்து 3 லட்சம் கோவிட் -19 இறப்புகளை கடந்த 3வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

இறப்பு விகிதம் அதிகரிக்கும் இந்தியா :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் கோரதாண்டவத்தினால் தற்போது அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,22,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 15 நாட்களாக தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 4000 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,67,52,447 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 4,454 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,03,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவில் இருந்து 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,37,28,011 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து 3 லட்சம் கோவிட் -19 இறப்புகளை கடந்த 3 வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here