யாஸ் புயல் யாருக்கு பாதிப்பு..! அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!!

0

கிழக்கு-மத்திய வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 26 ஆம் தேதி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இப்புயல் அதிதீவிர புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

யாஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் புயல் மூலம் வீசும் காற்றின் வேகம் 120 கிமீ வரை இருக்கும் அல்லது அதைவிட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மூலம் ஏற்படும் கடல் அலைகளால் அதிக சேதம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

இந்த புயல் மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை  மையம் தெரிவித்துள்ளது. புயல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி நான்கு மாநில முதல்வர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன்  ஆலோசனைகளை மேற்கொண்டார்.

யாஸ் புயலால் யாருக்கு பாதிப்பு:

  • வங்காளத்தின் கொல்கத்தா மற்றும் ஹவுரா பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெயும்.
  • தமிழகம், ஆந்திர கடலோரம், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.
  • ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.

  • மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஆந்திரா, ஒடிசா, தமிழ் நாடு, மேற்கு வாங்கலாம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

யாஸ் புயல் தொடர்பாக பேரிடர் மீட்பு ஏற்பாடுகள் குறித்து  ஆய்வு செய்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இதேபோல், தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட  குழுக்கள் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்ட பகுதிகளில்  படகுகள் உள்ளிட்ட கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here