“இல்லம் தேடி கல்வி” திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கு ரூ.2,000 பரிசுத்தொகை., வெளியான தகவல்!!!

0
"இல்லம் தேடி கல்வி" திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கு ரூ.2,000 பரிசுத்தொகை., வெளியான தகவல்!!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு மேற்கொள்ள “இல்லம் தேடி கல்வி திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க மாதம் ரூ.1,000 தொகுப்பூதியத்தில் தன்னார்வல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இத்திட்ட மாணவர்கள் பன்முகத் திறன் கொண்டவர்களாக உருவாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை பள்ளிக்கல்வித்துறை தொகுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மாணவர் சிந்தித்த கதையை குறும்படமாக தயாரிக்க “குறும்படம் கொண்டாட்டம்” போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தன்னார்வலர்கள் சிவகாமி, முத்துச்செல்விக்கு ரூ.2,000 பரிசுத் தொகையுடன் சான்றிதழ்களையும் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வழங்கி கவுரவித்தார்.

மே தின பரிசாக இந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., முதல்வருக்கு குவியும் பாராட்டு!!!

கடந்த கல்வியாண்டு மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றி குழு தலைவர்களாக நியமிக்கப்பட்ட 10 தன்னார்வலர்களுக்கு ரொக்கப்பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதுபோக மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி உள்ளனர். பரிசுத்தொகையை பெற்ற தன்னார்வலர்கள் கற்றலுக்கான உபகரணங்களை வாங்கி கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here