தமிழகத்திற்கு வரும் ஜனாதிபதி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!

0

மூன்று நாள் சுற்றுப்பயணமாக நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகிறார். இங்கு வந்த அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். தற்போது அதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜனாதிபதி:

ஏற்கனவே தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக மிகவும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் ஜனாதிபதி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரவுள்ளார். அதன்படி அவர் நாளை மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். இங்கு வந்த அவர் கவர்னர் மாளிகையில் தங்குகிறார். மேலும் வருகிற 10ம் தேதி அவர் ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு சென்ற அவர், அங்குள்ள பொற்கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்கிறார். அதன்பின்பு அவர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு அன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். மேலும் அன்று இரவும் அவர் சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்குகிறார். பின்பு அவர் வருகிற 11ம் தேதி அன்று தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்கு திரும்புகிறார்.

ரூ.510 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஒயின் ஷாப் – வியப்பில் மாநில அரசு!!

தற்போது இவரது வருகை காரணமாக சென்னைக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர். ஜனாதிபதி விமானம் மூலம் பழைய விமான நிலையத்திற்கு வருகிறார். எனவே பழைய விமான நிலையத்திற்கு தற்போது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வருகிற 11ம் தேதி வரை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here