இனி முடியாது., அஜித் அவர்களுடன் படம் பண்ணும் ஆசையே போயிடுச்சு! ரசிகரின் கேள்விக்கு பிரேமம் இயக்குனரின் உருக்கமான பதிவு!

0
இனி முடியாது., அஜித் அவர்களுடன் படம் பண்ணும் ஆசையே போயிடுச்சு! ரசிகரின் கேள்விக்கு பிரேமம் இயக்குனரின் உருக்கமான பதிவு!
இனி முடியாது., அஜித் அவர்களுடன் படம் பண்ணும் ஆசையே போயிடுச்சு! ரசிகரின் கேள்விக்கு பிரேமம் இயக்குனரின் உருக்கமான பதிவு!

மலையாள சினிமாவில் பிரேமம், நேரம் போன்ற பல வெற்றி படங்களை திரை உலகிற்கு தந்த இயக்குனர் தான் அல்போன்ஸ் புத்திரன். இவர் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரித்விராஜ் மற்றும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள ‘கோல்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து, அதை இணையத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தற்போது இவரின் ரசிகர்கள் ஒருவர் இவருக்கு ‘அஜித்துடன் ஒரு படம் பண்ணுங்க தலைவா’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

சந்திரசேகர், சமுத்திரகனி கூட்டணியில் உருவான “நான் கடவுள் இல்லை” ..,அதிரடியாக வெளியான படத்தின் ரிலீஸ் டேட்!!

அதற்கு இவர் ”அஜித் சார் அவர்களை சந்திக்க முயற்சி செய்து சோர்வடைந்து விட்டேன். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் இப்படி கமெண்ட் செய்யும் பொழுது எனக்கு மிகவும் வலிக்கும். ஆனால் நீங்களும் Ak அவர்களின் தீவிர ரசிகராக இருப்பதால்தான் இப்படி கேட்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here