சந்திரசேகர், சமுத்திரகனி கூட்டணியில் உருவான “நான் கடவுள் இல்லை” ..,அதிரடியாக வெளியான படத்தின் ரிலீஸ் டேட்!!

0
சந்திரசேகர், சமுத்திரகனி கூட்டணியில் உருவான
சந்திரசேகர், சமுத்திரகனி கூட்டணியில் உருவான "நான் கடவுள் இல்லை" ..,அதிரடியாக வெளியான படத்தின் ரிலீஸ் டேட்!!

இயக்குனர் சந்திர சேகர் படைப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடித்த நான் கடவுள் இல்லை என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சமுத்திரகனி:

ராஜபாளையம் பகுதியில் உள்ள சேத்தூர் என்ற ஊரில் இருந்து சினிமாவில் நடிப்பதற்காக வெறும் 150 ரூபாயுடன் சென்னைக்கு ஓடி வந்தவர் தான் சமுத்திரக்கனி. தற்போது முன்னணி நட்சத்திரமாக அதிரடி காட்டி வருகிறார். இவர் இயக்குனராக அறிமுகமாகி, இப்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் இயக்கிய நாடோடி, அப்பா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது தளபதி விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய புது படத்தில் நடிகர் சமுத்திரக்கனி லீடு ரோலில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனி காவல்துறை கெட்டப்பில் பட்டையை கிளப்பும் இப்படத்திற்கு நான் கடவுள் இல்லை என்று பெயர் சூட்டியுள்ளனர். அது போக இப்படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால், சரவணன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்ல படம் பண்ணலாமா? Help வேணும்னா என்கிட்ட கேளுங்க.., ராஜமவுலிக்கு பூஸ்ட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்!

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் சந்திரசேகர் படைப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடித்த நான் கடவுள் இல்லை படம் அடுத்த மாதம் 3ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here