ஜெகன் மோகனை வெற்றிபெறச் செய்த கையோடு ஸ்டாலினுடன் கைகோர்த்த பிரஷாந்த் கிஷோர் – கார்ப்பரேட் மான்ஸ்டர் பிரஷாந்த்..!

0

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் தான் சார்ந்த கட்சிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்து அரியணை ஏற்றிய பிரஷாந்த் கிஷோர் டீம் தற்போது 2021 தேர்தலில் ஸ்டாலினின் திமுக உடன் இணைந்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக வெற்றியின் பக்கபலம்..!

2014ம் ஆண்டு இந்திய அரசியலில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதில் பிரஷாந்த் கிஷோர் டீமின் பங்கு மிக முக்கியமானது. இந்த தேர்தலுக்கு பிறகு தான் இவரின் பெயர் பரவலாக பேசப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் இந்திரா காந்திக்கு பிறகு இந்த அளவு வெற்றி பெற்று பிரதமராகிய நபர் நரேந்திர மோடி தான். இதிலிருந்து தான் பிரஷாந்த் கிஷோரின் பெயர் பெரிதளவில் பேசப்பட்டது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

2015ல் ஐக்கிய ஜனதா தளம், டெல்லி ஆம் ஆத்மி..!

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காக 2015ம் ஆண்டு பணியாற்றிய பிரஷாந்த் கிஷோர் அக்கட்சியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். பின்பு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும் இவரது டீமே வியூகம் வகுத்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் அரியணை..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் ஜாம்பவான் ஆன சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசத்தை வீழ்த்தி அரியணை ஏறிய காங்கிரசின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்ற போதும் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் அணியில் பிரஷாந்த் கிஷோர் இடம் பெற்று இருந்தார். குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்ததால் அந்த கட்சியில் இருந்து அவர் விலகினார்.

பெரியார் கொள்கையுடைய கட்சிக்கு கார்ப்பரேட் உதவியா..?

தற்போது 2021ம் ஆண்டு தேர்தலுக்கு திமுக கட்சியுடன் பிரஷாந்த் கிஷோர் கைகோர்த்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஆனால் பெரியாரின் கொள்கைகளை மூலமாக கொண்டு செயல்படும் கட்சிக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் உதவி தேவையா என்ற கேள்வியும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக உள்ளது. ஆனால் அரசியலில் தற்போது எதிர் கட்சிகள் மிகுந்த பலத்துடன் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

தமிழகத்திலும் எடுபடுமா..?

2021ம் ஆண்டு கண்டிப்பாக ஆட்சியை புடித்து விடும் நோக்கில் இருக்கும் ஸ்டாலினுடன் பிரஷாந்த் கிஷோர் கைகோர்த்து உள்ளதால் பிற கட்சிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய கார்ப்பரேட் மான்ஸ்டர் பிரஷாந்த் கிஷோரின் டீம் தமிழகத்திலும் அதனை நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here