அர்ஜுனா விருதுக்கு தமிழக வீரர் பெயர் பரிந்துரை…, இணையத்தில் கசிந்த தகவல்!!

0
அர்ஜுனா விருதுக்கு தமிழக வீரர் பெயர் பரிந்துரை..., இணையத்தில் கசிந்த தகவல்!!
அர்ஜுனா விருதுக்கு தமிழக வீரர் பெயர் பரிந்துரை..., இணையத்தில் கசிந்த தகவல்!!

தேசிய விளையாட்டு தினத்தன்று வழங்க இருக்கும் அர்ஜுனா விருதுக்கு தமிழக வீரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அர்ஜுனா விருது:

இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, அர்ஜுனா விருது வழங்கி அரசு கவுரவித்து வருகிறது. இந்த அர்ஜுனா விருது, கடைசியாக 2021 ம் ஆண்டு கிரிக்கெட்டில் தவான், டென்னிஸில் அங்கிதா ரெய்னா, மல்யுத்தத்தில் தீபக் புனியா உள்ளிட்ட 35 பேருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த ஆண்டு விருது வழங்குவதற்காக மத்திய அரசு பரிந்துரைகளை தயார்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில், உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மூன்று முறை தோற்கடித்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பெயரை மத்திய அரசுக்கு தமிழக செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், சமீபத்தில் தான் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதோடு உலக கோப்பை செஸ் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் வெற்றி பெறணும்னா இந்த மாற்றத்தை செஞ்சே ஆகணும் …, முன்னாள் கேப்டன் அட்வைஸ்!!

இவரை தொடர்ந்து, இந்த விருதுக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம்(BAI) எச் எஸ் பிரணாய் மற்றும் இளம் வீரரான லக்ஷ்யா சென் ஆகியோரது பெயர்களையும் பரிந்துரையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்து, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேசிய விளையாட்டு தினத்தன்று இந்திய அரசு வழங்குக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here