அரையிறுதியில் வெற்றி பெற இந்த மாற்றத்தை செஞ்சே ஆகணும் …, முன்னாள் கேப்டன் அட்வைஸ்!!

0
அரையிறுதியில் வெற்றி பெற இந்த மாற்றத்தை செஞ்சே ஆகணும் …, முன்னாள் கேப்டன் அட்வைஸ்!!
அரையிறுதியில் வெற்றி பெற இந்த மாற்றத்தை செஞ்சே ஆகணும் …, முன்னாள் கேப்டன் அட்வைஸ்!!

அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டுமானால் இந்த மாற்றத்தை செய்தாக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, பாபர் அசாமிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த சுற்றுகளின் முடிவில், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறினர். இதில், பாகிஸ்தான் அணியானது, இந்த உலக கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு இவங்க தான் காரணம்.., முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

இதனால், பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்திருந்தன. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் என அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இதனால், விமர்சனங்கள் எல்லாம் தற்போது பாராட்டாக மாறியது. ஆனால், கேப்டன் பாபர் அசாமின் பார்ம் மட்டும் இந்த அணியில் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. அதாவது, இந்த உலக கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடி 39 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, அரையிறுதிக்கு முன்னேறியது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பாபர் அசாமிடம் ஒரு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். அதில், அரையிறுதி போட்டியில், தொடக்க வீரராக முகமது ரிஸ்வானுடன் முகமது ஹரீஸை களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதன் விளைவால் நல்ல அடித்தளம் அமைவதோடு, வெற்றிக்கும் அதிக வாய்ப்பு இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here