சர்ச்சை இயக்குனருடன் கூட்டணி சேரும் பிரபு தேவா…!அப்புறம் என்ன இன்னொரு கில்மா படம் தான்!!!

0

நடன இயக்குனராக திரைக்கு வந்தவர் நடிகர் பிரபு தேவா அவர்கள். அதன் பிறகு நடிகர், பட இயக்குனர் என தன்னுடைய பல திறமைகளை நிரூபித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் பல சர்ச்சைகளுக்கு பெயர் போன சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவரின் படங்கள் பெரும்பாலானவை கில்மா படங்களாகவே இருக்கும் அந்த வகையில் தற்போது அவருடன் பிரபு தேவா இணைந்து இருப்பது திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மொழியில் பல படங்களுக்கு நடனம் அமைத்தவர் நடிகர் பிரபு தேவா அவர்கள். அதன் பிறகு காதலன் படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் போக்கிரி, வில்லு போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களையும் இயக்கி உள்ளார். அவரின் பல படங்கள் மிகுந்த வெற்றியை பெற்று உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஹீரோவாக தேவி என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார். அதை தொடர்ந்து அவர்  நடித்த சில படங்கள் தோல்வியை தழுவினாலும் அவருக்கு ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அவர்களின் இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த இயக்குனர்  இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து போன்ற படங்களை இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படம் இயக்குனரின் எப்பொழுதும் போல அடல்ட் பட பாணியில் இருக்கமா அல்லது வேறு ஏதும் கதைக்களமா என்பது போக போக தான் தெரிய வரும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here