‘ஆமாங்க, எனக்கு காதல் தோல்விதான்’.. இறுதியாக ஒப்புக்கொண்ட பிரேமம் நாயகி!!

0

குறுகிய காலத்தில் முன்னனி நடிகையாக உயர்ந்த பிரேமம் நாயகி அனுபமா பரமேஸ்வரன் தன் காதல் தோல்வி பற்றி ஓப்பனாக தனது ரசிகர்களிடம் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய  ‘பிரேமம்’ படத்தின் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர் இவர். சுருட்டை முடி, அழகான புன்னகை, அளவான மேக்கப் என இவரை பார்த்த ரசிகர்கள் மனதில் தனது முதல் படத்திலேயே இடம் பிடித்தார். பின்னர் இவருக்கு தெலுங்கு, தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொண்ட அனுபமா தற்போது முன்னனி நடிகைகளுக்கு இணையாக வளர்த்துள்ளார்.

anupama parameswaran

அனுபமாவுடன் பல நடிகர்கள் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர் பும்ராவும் அனுபமாவும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பியது. இந்நிலையில் காதல் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அனுபமா பதில் அளித்துள்ளார். அனுபமா ‘ஆமாம், நான் ஒருவரை காதலித்தேன், ஆனால் அந்தக் காதல் சீக்கிரமாகவே முடிவுக்கு வந்தது. நீண்ட காலம் நிலைக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் அது யார் என்பது பற்றி அனுபமா கூறவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here