மிக்ஜாம் புயல் எதிரொலி: “கலைஞர் 100 விழா” ஒத்திவைப்பு., இந்த தேதியில் தான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது கட்சி தொண்டர்களால் திமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில் கலைஞர் 100 வது விழாவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அதிகாரிகளிடம் இதற்கான ஒப்புதல் பெற்று வரும் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக கலைஞர் 100 வது விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எப்போது நூற்றாண்டு விழா நடைபெறும் என தயாரிப்பாளர் சங்க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி கலைஞர் 100 வது விழா பிரமாண்டமாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here