தேர்வுத்துறை இயக்குநருக்கே கொரோனா இதில் பொது தேர்வா.? – ராமதாஸ் ட்வீட்..!

0
pmk ramadoss
pmk ramadoss

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 10 இல் நடைபெற உள்ள நிலையில் தேர்வுத்துறை இணை இயக்குநர் உள்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொது தேர்வுகள்

நாடு முழுவதும் மார்ச் 24 இல் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 15 இல் நடைபெறுவதாக உள்ளது. இந்த நிலையில் தேர்வுத்துறை இணை இயக்குநர் உள்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இதை மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here