காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

0

இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாடப்போவதில்லை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி பிறந்தார். இன்று 74-வது பிறந்தநாளான கொண்டாட போவதில்லை என்றும், டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவை காங்கிரஸ் வழக்கும் என்றும் கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கே.சி வேணுகோபால் காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில்,”தொடர்ச்சியாக விவசாய மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருவதாலும் கொரோனா சூழலாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக சோனியா காந்தி இந்த ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாட மாட்டார். மத்திய அரசிற்கு எதிரான இப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுடன் நிற்பார்கள். அதனால், கேக் வெட்டுதல் உட்பட எந்த பிறந்தநாள் கொண்டாட்டமும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

பீலா ராஜேஷுக்கு நீதிபதிகள் கண்டனம்!!

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here