சட்டத்தை மதிக்க மாட்டீர்களா? பீலா ராஜேஷுக்கு நீதிபதிகள் கண்டனம்!!

0

நீதிமன்ற உத்தரவை மீறிய பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கெனைன் கிளப் வழக்கின் இன்றைய விசாரணையின் போது, நீதிமன்ற தடை உத்தரவை மீறி தனியார் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மத்திய பத்திரப் பதிவுத்துறை பதிவாளர்ருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பீலா ராஜேஷ்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக இருந்தவர், பீலா ராஜேஷ். ஆனால், இவர் தற்போது வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம், கொரோனா சூழ்நிலையில் ஏற்பட்ட மரணங்களை தமிழக அரசு மறைகிறது என்று தமிழக அரசுக்கு எதிராக பேசினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (கெனைன் கிளப்) நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கெனைன் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்கக் பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. கெனைன் கிளப் அதை மறுக்கவே, ஏன் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கக் கூடாது? என கெனைன் கிளப்புக்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியது. பதிவுத்துறையின் நோட்டீசை எதிர்த்து கெனைன் கிளப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கெனைன் கிளப் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை பிறப்பித்தது.

madras high court
madras high court

இவ்வுத்தரவை மீறி கெனைன் கிளப்பை நிர்வகிக்க 3 சிறப்பு அதிகாரிகளை நியமித்தது, பதிவுத்துறை. இதையடுத்து உய்ரநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கெனைன் கிளப் சார்பாக தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கெனைன் கிளப்பை நிர்வகிக்க 3 சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மத்திய பத்திரப் பதிவுத்துறை பதிவாளரை, “நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்களா ? என நீதிபதிகள் கடுமையாக சாடினார்.

ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா?? குழப்பத்தில் பொதுமக்கள்!!

இறுதியாக, கெனைன் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளின் உத்தரவு நிறுத்திவைக்கப்படும் என்று உறுதியளித்த நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து, நீதிமன்ற உத்தரவை மீறிய பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here