சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தற்கொலை தானா அல்லது கொலையா?? என்ற என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் சித்ராவின் முகத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு காரணம் குறித்து சித்ராவின் தாயார் போலீசிடம் புகாரளித்துளார்.
சித்ரா மரணம்:
சின்னத்திரை நடிகையாக இருக்கும் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த சித்ரா தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியாக தான் உள்ளது. ஏனெனில் சித்ரா தனி ஆளாக நின்று இதுவரை சாதித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை பிரச்சனைகளை கடந்து வந்த அவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன தான் பிரச்சனை?? இவருக்கும் ஹேமந்த் அவர்களுக்கும் திருமணம் நடக்க இருக்கும் இருக்கும் நிலையில் விஜய் டிவியில் கூட அவர்களுக்கு நலங்கு வைக்கும் விழாவை நடத்தி வைத்தார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடனேயே இருக்கும் சித்ராவிற்கு இப்படி ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது.
இந்நிலையில் மரணத்திற்கு பிந்தைய சித்ராவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் அவரது முகத்தில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. தூக்கு போட்டால் கழுத்தில் தானே சிவப்பாக பதிந்திருக்கும். ஆனால் அவரது கன்னத்தில் நகத்தால் கீறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சித்ராவின் அம்மாவும் இது குறித்து புகாரளித்துளார்.
கர்ப்பமான விஷயத்தை வீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கும் தனம்!!
இந்நிலையில் சித்ரா சைகாலஜி வேறு படித்துள்ளார். அப்படி இருக்க அவர் எப்படி இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு செல்ல முடியும். அதுவும் கன்னத்தில் ரத்த காயம் வேறு. மேலும் ஹேமத்தும், சித்ராவும் முதலில் ஒன்றாக தான் தங்கியுள்ளனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்கள் தனித்தனியாக தங்கியுள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது கண்டிப்பாக தற்கொலையா?? அல்லது கொலையா?? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேமந்த் மேல் தான் அனைவர்க்கும் தற்போது சந்தேகம் எழுந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் சித்ராவிற்கு என்ன ஆனது என்ற விவரம் தெரியவரும்.