இந்தியாவில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!!

0
PM Modi Conference
PM Modi Conference

இந்தியாவில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் ஆலோசனை:

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை 2,217,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 44,499 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 1,536,259 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் சற்று குறைவாகவே உள்ளது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

PM Modi
PM Modi Conference

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று!!

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்தும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் 11ம் தேதி 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கலந்து கொள்ள உள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here