பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

0

பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி மற்றும் கோவைக்கு வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தமிழகம் வருகை

பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசுமுறை பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்தார். தற்போது நாளை வியாழக்கிழமை மீண்டுமாக தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். நாளை காலை 7.45 மணிக்கு விமானத்தின் மூலம் டில்லியிலிருந்து புறப்படும் பிரதமர் மோடி, காலை 11.30 மணிக்கு சென்னைக்கு வருகை தரவுள்ளார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதுச்சேரியில் காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்கும் அவர் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டியுள்ள பல்வேறு அரசு கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அடுத்ததாக லாசுப்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். கூட்டம் முடிந்ததும் மதியம் 2.15 மணிக்கு சென்னை திரும்பும் பிரதமர் மோடி பிற்பகல் 3.30 மணிக்கு கோவை வரவுள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு கூட்டங்களில் பங்கேற்கும் மோடி, மின்வாரியம், கப்பல் போக்குவரத்து, நகராட்சி நிர்வாகம், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட புதிதாக கட்டப்படவுள்ள அரசு துறைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு கொடிசியா வளாகத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார். பிற்பாடு கூட்டம் முடிந்ததும் கோவையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு திரும்புகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்!!

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கோவை பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பது ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு கூடுதல் டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காளிப்பாளர் அருளரசு ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் மேடை பாதுகாப்பு, பொதுக்கூட்ட பாதுகாப்பு, போக்குவரத்து மாற்றம் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டது.

மேலும் பாதுகாப்பு பணியில் 17 எஸ்பிக்கள், 38 கூடுதல் எஸ்பிக்கள், 48 டிஎஸ்பிக்கள் உட்பட 3,000 ஈடுபட உள்ளனர். கொடிசியா வளாகத்தின் நுழைவாயிலில் தற்காலிக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பாதுகாப்பு படை கமாண்டோக்கள் டில்லியிலிருந்து கோவை வந்துள்ளனர். மேலும் பிரதமர் பயணிக்கவுள்ள குண்டுகள் துளைக்காத 4 கார்களும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here