சட்டமன்ற தேர்தல் எப்போது?? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!!

0
The Chief Election Commissioner, Shri Sunil Arora along with the Election Commissioners, Shri Ashok Lavasa and Shri Sushil Chandra holding a meeting of the Multi-Departmental Committee on Election Intelligence, in New Delhi on March 15, 2019.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேதி குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகம், கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வர உள்ளது. எனவே இந்த ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தலுக்காக அரசியல் காட்சிகள் அனைத்தும் தற்போது தங்களது தேர்தல் பணிகளில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தேர்தல் அதிகாரிகளும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 45 கம்பெனி துணை ராணுவ படை நாளை தமிழகத்திற்கு வருகின்றனர். ஒரு கம்பெனிக்கு 100 வீரர்கள் வீதம் மொத்தமாக 4500 வீரர்கள் பாதுகாப்பிற்காக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.

குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – 409 இடங்களில் பாஜக அபார வெற்றி!!

மேலும் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்பு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here